இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கும்வரை போராடுவோம்: தமிழக முதல்வர் உறுதி!

இந்தியாவில் நீண்டகாலமாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும்வரை அதற்காக தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin உறுதியளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகளை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நீண்டகாலமாக வசித்து வருவோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை வழங்குவதற்கு இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை நம் குரல், தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்’ எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி