இலங்கை

40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் – இன்று முதல் அமுலுக்கு!

இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும் இலவச விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் .

அதன்படி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், நோர்வே, ஓமான், பாகிஸ்தான், போலந்து, கட்டார், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம்  மற்றும் அமெரிக்கா ஆகிய 40 நாடுகளின் பிரஜைகள் இந்த சலுகையை பெற தகுதியுடைவர்களாவர்.

இதேவேளை குறித்த 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகளும்  இலங்கைக்கு வருகைத் தர முன்னர் இணையவழி சுற்றுலா அனுமதி  ஒன்றைப் பெற்றுக்கொள்வதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இலவச விசாவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், அதற்குரிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா காலத்தை நீடிப்பதற்குக் விண்ணப்பிக்கலாம்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!