இலங்கை செய்தி

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தனியார் நிறுவனமொன்றின் மேல் மாடியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் இன்று (26) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேல் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்களும் ஆபத்தான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முலத்தீவு, 10ஆம் லேன், புதுக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் தனியார் நிறுவனத்தின் மேல் தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இளைஞர் ஒருவரும், சம்பந்தப்பட்ட இளைஞன் கீழே வராததால் மற்றொரு வாலிபர் அந்த இடத்துக்கு சென்று  சோதனை செய்துள்ளார்.

குறித்த நிறுவனத்தின் மேல் தளத்திற்கு அருகாமையில் பல உயர் அழுத்த மின்கம்பிகள் காணப்படுவதால் உயர் அழுத்த மின்கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இல்லையெனில் மற்றுமொரு மின் கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை