இலங்கை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் சார்ஜன்ட்ஸ் கைது!

10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை, யடவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் காலாவதியானமைக்காகவும், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமைக்காகவும் சட்டத்தை கையாள்வதை தவிர்ப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு இலட்சம் ரூபா லஞ்சம் கேட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும், பின்னர் அது 50,000 ரூபாவாக குறைக்கப்பட்டதுடன், 10,000 ரூபாவை பெற்றுக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்