செய்தி

ஈரானில் ஆட்சி மாற்றம்: ட்ரம்ப் கூறுவது என்ன?

ஈரான்மீதான போரினால் அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதால், தற்போது புதியதொரு குழுவுடன் அமெரிக்கா பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்கள் மிகவும் யதார்த்தமாகச் செயல்படுவதால், அவர்களுடன் ஒரு சுமுகமான உடன்படிக்கை ஏற்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதையும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி