ஐரோப்பா

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு சிக்கல்

33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

போட்டியின் தொடக்க விழா மற்ற வருடங்களைப் போன்று மைதானத்தில் நடத்தப்படாது எனவும், பாரிஸ் நகரில் Seine நதிக்கரையோரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 தங்கப் பதக்கங்கள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், உதைபந்தாட்டம், ரக்பி, கரப்பந்து, வில்வித்தை ஆகிய முதற்கட்ட போட்டிகள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளன.

இந்த பதவியேற்பு விழாவை படகுகளில் நடத்துவது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒலிம்பிக்கிற்கு ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களில் 3/4 க்கும் குறைவான வீரர்களே இந்த தொடக்க விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிசில் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மற்றும் ஊடகவியலாளர்கள் குழுவொன்று கடத்த முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்பில் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், திறப்பு விழா நடைபெறும் படகுகளில் கழிப்பறை வசதி இல்லாதது கடும் பிரச்னையாக இருப்பதாகவும், இதுபோன்ற சுகாதார வசதிகள் இல்லாததால் வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்