இலங்கை

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாளைய தினம் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மூடும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் மோசமான காலநிலை காரணமாகவும், கனமழையுடன் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதாலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் பயண நடவடிக்கைகள் தடைபட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்