செய்தி

இலங்கை பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை!

இலங்கை பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இஸ்லாமிய பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி