ஐரோப்பா

லண்டனில் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒலித்த குரல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

காஸா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

காசா பகுதியை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் யூத சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரையும் நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்