2050 ஆம் ஆண்டில் மனிதர்கள் இப்படிதான் இருப்பார்களாம்!!
தற்போதைய நவீன காலத்தில் மக்களின் வேலைகளை இலகுவாக்கும் வகையில் பல தொழில்நுட்ப உபகரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கிய பங்கு வகிப்பது தொலைபேசிதான்.
தற்போது கையில் ஒரு ஆறாம் விரலைபோலத்தான் இந்த கையடக்க தொலைபேசிகள் இயங்குகின்றன.
வங்கி பரிவர்த்தனைகள் முதல் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே இலகுவாக மேற்கொள்ளும் வகையில் இந்த கையடக்க தொலைபேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காலத்தின் போக்கிற்கு ஏற்ப தற்போது இந்த தொழில்நுட்பம் மாத்திரம் இல்லையென்றால் சுற்றும் பூமியே ஒரு கனம் நின்றும் விடும் என்ற அளவில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள்.
எவ்வளவு தான் சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் நாணயத்தின் இரட்டை பக்கங்களைபோல பாதகமும் இருக்கிறது. இதனை எடுத்தியம்பும் வகையில் ஆய்வாளர்களின் தற்போதைய ஆராய்ச்சி அமைந்துள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை WeWard இன் ஒரு குழு ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த படம் வருமாறு,

மனிதர்கள் நீண்டம் நேரம் அமர்ந்திருப்பதாலும், அதிகளவில் திறையை பார்ப்பதாலும், உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதாலும், இந்நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் வருவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் போதுமானது என்பதுதான் கவலைக்குரிய விடயம்.





