இலங்கை

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த தேரர்

ஹப்புத்தளை வெலிமடை வீதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வெளிநாட்டு பெண் ஒருவரை தவறாக நடந்துக் கொண்ட செய்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை ஹப்புத்தளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வெலிமடை வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டு தம்பதியரை கோயிலை காட்டுவதாக கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த தேரர் வெளிநாட்டு பெண்ணுடன் வந்த தனது துணையை வெளியில் இருக்குமாறு கூறிவிட்டு விகாரையுடன் கூடிய இருட்டு அறையில் வைத்து வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வெளிநாட்டு பெண் ஹப்புத்தளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான போலந்து பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டவர் 18 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்