இலங்கை

கொடிய HMPV வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

இலங்கையில் சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என அந்த அமைச்சின் கொவிட்-19 நோய் தொற்று தொடர்பான பிரதான ஒழுங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

HMPV வைரஸ் அமெரிக்க உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் இந்த வைரஸ் உயிரை கொல்லக்கூடிய சுவாச தொற்றை ஏற்படுத்தும்.

எனினும் இந்த வைரஸ் நாட்டில் இதுவரை பரவவில்லை என்பதுடன், அது தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகளும் அதிக அவதானத்துடன் செயற்படுவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்