சிங்கப்பூர் இணையச் சேவை பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் விரைவில் இணையச் சேவை மேலும் வேகமாக செயற்படவுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஐந்தாண்டில் சிங்கப்பூர் நெடுகிலும் விநாடிக்கு 10 gigabits வேகத்தை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இணையத் தொடர்பை மேம்படுத்துவது பற்றிய புதிய நகல் அறிக்கை அந்த விவரங்களை முன்வைக்கிறது.
அதற்கமைய, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற நாடு தயாராக இருக்க வேண்டும் என தகவல் தொடர்பு, தகவல்துறை அமைச்சரும் அறிவார்ந்த தேசம் இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசப்பின் தியோ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் இணையச் சேவை உலகத்தோடு தொடர்பை வலுப்படுத்தும் என்று புதிய நகல் அறிக்கை கூறியது.
Singpass, SGFinDex போன்ற சேவைகளின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)