நல்லூர் தேர்த்திருவிழா (புகைப்பட தொகுப்பு)
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழிந்தன. காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 7.00 மணியளவில் முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் நல்லூரான் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர், காலை 7.30 மணியளவில் திருத்தேரின் வடம் […]













