உலகம் செய்தி

போர் நிறுத்த நீடிப்பு அமைதிக்கு வழிவகுக்கும்: ஐ.நா. நம்பிக்கை

  • April 22, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தற்காலிக யுத்த நிறுத்தத்தை நீட்டிக்கும் முடிவை ஐ.நா.பொதுச்செயலாளர் António Guterres வரவேற்றுள்ளார். இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேம்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்ட ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று அவர் கருதுகிறார். மேலும், இந்த இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் பாகிஸ்தான் ஆற்றும் முக்கியப் பங்கையும் ஐ.நா. […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் நீடிப்பு! கடற்படை முற்றுகை தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடும் பாகிஸ்தானால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரான்மீதான கடற்படை முற்றுகை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஆரம்பத்தில் தாக்குதலுக்குத் தயாராக இருந்த அமெரிக்காவின் இந்தத் திடீர் மனமாற்றம், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான புதிய […]

உலகம் செய்தி

ஈரானில் முரண்பாடு இல்லை, கொள்கை நிலை சீராக உள்ளது – சர்வதேச நிபுணர் விளக்கம்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகள் குறித்து வெளிவரும் முரண்பட்ட தகவல்கள், உண்மையில் உள்நாட்டு குழப்பத்தை காட்டுவதல்ல என சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஈரான் திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பிபிசி ரேடியோ 4 ‘டுடே’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அலி வேஸ், ஈரான் ஆட்சி கொள்கை வகுப்பிலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டிலும் உயர் அளவிலான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதாக கூறினார். ஈரானில் இருந்து வரும் சில முரண்பட்ட செய்திகள் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிடும் மாற்றமான நிலைப்பாடுகளுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்பட […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]

உலகம் செய்தி

ஈரானை சூழும் பொருளாதார பேரிடி – சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தில், இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் தொடர்ந்தால், அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? பேச்சுவார்த்தைகளை நிறுத்தும் நிலையை ஈரான் தாங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போருக்கு முன்பே பொருளாதார தடைகள், பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்பு காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும்பாலான குடும்பங்கள் செலவிடும் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு பாகிஸ்தான் அவசர கோரிக்கை!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இருவாரகால தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) நிறைவடையும் நிலையிலேயே இந்த அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவருடன் Natalie A. Baker இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq ⁠Dar இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்தை […]

ஆப்பிரிக்கா உலகம் செய்தி

ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா நேசக்கரம்!

  • April 21, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா உதவும் என அந்நாட்டு ஜனாதிபதி Xi Jinping உறுதியளித்துள்ளார். Mozambique நாட்டு ஜனாதிபதியுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அத்துடன், ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் இணைந்து அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீன ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல போரை உடனடியாக நிறுத்திவிட்டு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு போர் நடைபெறும் நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளார். ஆபிரிக்க நாடுகளில் சீனா […]

செய்தி

செம்மணி மனித புதைகுழி: ஐரோப்பிய குழுவின் கண்காணிப்பு விஜயம் ஒத்திவைப்பு!

  • April 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று (21) பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தற்போது களத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறாத காரணத்தால், இன்று அவர்கள் வருகை தரவில்லை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் […]

இலங்கை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

  • April 21, 2026
  • 0 Comments

மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை இன்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் (Application) இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், […]

செய்தி

பாகிஸ்தானின் சமரச முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் Ishaq Dar மற்றும் சீனத் தூதுவர் ஜியாங் ஜைடாங் Jiang Zaidong ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளை சீன தூதுவர் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!