சுதந்திரத் தமிழீழம் காண ஐ.நா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – வைகோ அழைப்பு!
இலங்கையில் தமிழீழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், “மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் சில நாடுகளில் நடந்த இனப் படுகொலைகளில் மிகவும் கோரமானதும், கொடூரமானதும், நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதுமான படுகொலை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை ஆகும். வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து […]




