இலங்கை

முதியோர் இல்ல தீவிபத்து – மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஹொரணை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றைய தினம் தீவிபத்து தொடர்பான நீதான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இச்சம்பவம் நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் 71 பேர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும்  இராணுவத்தினரின் உதவியுடன் மற்றுமொரு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முக்கிய செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத்தில் பாரிய தீவிபத்து – எரிகாயங்களுடன் பலரின் உடல்கள் காணப்படுவதாக தகவல்!

  • June 3, 2026
  • 0 Comments

ஹொரணை – பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 55 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் 11 பேர் காணாமல்போயுள்ளதாகவும், எரிந்த நிலையில் பலரின் உடல்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.