சுரேஷ் சாலேமீது 3 குற்றச்சாட்டுகள்: 25 பக்க அறிக்கை நீதிமன்றில் முன்வைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, Major General Suresh Sale மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நேற்று மேற்படி தகவலை வெளியிட்டனர். இது தொடர்பில் 25 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வவுணதீவில் இரண்டு காவல்துறையினரின் கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, […]













