இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன – ஜனாதிபதி தெரிவிப்பு

  • November 7, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அதனால்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தனியார் சொத்துகள் சூறையாடப்படும் என்ற மாயை உருவாக்கப்பட்டது. ஆனால் அது போலி என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. சிறந்த முதலீடுகளைப் பெறுவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் […]

இலங்கை

வரவு – செலவுத் திட்டம்!! நம்பிக்கை இல்லை என்கிறார் சாணக்கியன் எம்.பி

  • November 7, 2025
  • 0 Comments

வரவு – செலவுத் திட்டம் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என நம்பமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் இன்று முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் எனவும் சூளுரைத்திருந்தது. […]

இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் நாளை முன்வைப்பு

  • November 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை (07) முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவார். இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும். […]

இலங்கை

தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் அரச சேவை நாட்டிற்கு அவசியம்!

  • October 18, 2025
  • 0 Comments

தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம். இந்த விடயத்தில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பு முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந்த ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி […]

error: Content is protected !!