இலங்கை

யாழில் விசேட அதிரடிப் படையினரின் திடீர் சுற்றிவளைப்பு – 4 வாள்களுடன் சிக்கிய நபர்

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று (21) தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளுகளும் மீட்கப்பட்டது.

உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்