உலகம் செய்தி

விண்வெளியில் 2வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது 59வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.

தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது.

இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்கு முன்பு, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி