இலங்கை செய்தி

திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும்!!!! சந்திரிகா குமாரதுங்க

கடனை அடைப்பதற்காக திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை திவாலாக்குவதற்கு யார் பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரிதான மற்றும் சிறந்த முடிவு என சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளுக்கான தண்டனையை மனுதாரர் கோராததால், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினரை உச்சநீதிமன்றம் தண்டிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

பொறுப்பான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்று தண்டனை மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை