இலங்கை

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: புதிய விரல் குறியிடும் செயல்முறை! ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடது கையின் ஆள்காட்டி விரலில் குறிக்கப்படும்.

இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலோ குறிக்கப்படும்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்கனவே இடது கையின் சுண்டு விரலில் குறியிடப்பட்டுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடது கையின் கட்டை விரலைப் பயன்படுத்தவிருப்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதியும், பாராளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்