இலங்கை

இலங்கை : சுதந்திரமாக நடமாட முடியவில்லை : பொலிஸ் பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா!

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து தன்னால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா  இராமநாதன் பாராளுமன்ற அதிகாரிகளிடம் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆரம்பமான திசையமைப்பின் முதல் நாளின் போது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

கைத்துப்பாக்கி மற்றும் பாதுகாப்பை வழங்குவது பாராளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் கீழ் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சின் மதிப்பீட்டின்படி பொலிஸ் பாதுகாப்பு அல்லது கைத்துப்பாக்கியைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்