இலங்கை

இலங்கை : மேல்மாகாண மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

மேல்மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் இறுதிப் பரீட்சைகள் நாளை (06.03) மீண்டும் நடைபெறவுள்ளதாக மேல்மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு முன்னதாக அறிவியல், வரலாறு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்களை தயாரித்த பின்னர், உரிய தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறும் என மேல்மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை வினாக்கள் வெளியேறியமை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் வளாகத் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா கருத்து வெளியிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்