இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிர்ச்சி – உயிர் ஆபத்தில் இருந்து முழு கும்பத்தையும் காப்பாற்றிய நாய்

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று அதிகாலை தொடங்கொட, கமகொட, வத்தேகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் உள்ள பனை மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் வீடு முற்றாக இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வீட்டில் இருந்த வளர்ப்பு நாயினால் குடியிருப்பாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை உறங்கிக் கொண்டிருந்த போது அறையில் இருந்த படுக்கைக்கு வந்த நாய் கொசுவலையை வாயால் கிழித்து கட்டிலில் இருந்த உரிமையாளரை எழுப்பியதாக வீட்டு உரிமையாளர் கூறுகிறார்.

பின்னர் தனது பிள்ளைகளும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் தான் உறங்கிக் கொண்டிருந்த அறையின் மீது பனைமரம் விழுந்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குள் நாயின் நடத்தையினால் வீட்டில் இருந்த அனைவரும் விழித்திருந்ததாகவும், இதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் உயிர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் 5 பேரை நாய் காப்பாற்றியதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்