ஐரோப்பா

ரஷ்யாவின் கோர முகம் அம்பலம் : குழந்தைகள் புற்றுநோய் மையத்தை குறிவைத்து தாக்குதல்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு இனப்படுகொலை வெறி பிடித்தவர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

ஏனெனில் அவர் நேற்று இரவு (08.07) உக்ரைனில் அமைந்துள்ள குழந்தைகள் புற்றுநோய் மையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில மாதங்களில் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதியின் படைகள் குழந்தைகள் மருத்துவமனையை குறிவைத்துள்ளன.

நாடு முழுவதும் நடந்த தாக்குதல்களில் ஒரு மருத்துவர் உட்பட குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 140 பேர் காயமடைந்தனர், இது உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

Kyiv’s Okhmadyt மருத்துவமனையில்  இந்த கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்