ஐரோப்பா

உக்ரைனின் இரு நகரங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் !

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்றைய தினம் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யா உக்ரைனின் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்