ஐரோப்பா

தம் சொந்த வீரர்களுக்கே சிறை தண்டனை விதித்த ரஷ்யா

உக்ரைன் போரில் விதியை மீறியதற்காக 8 ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு, ரஷ்யா சிறை தண்டனை விதித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து உக்ரைனில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு, ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் முகாமில் சரியான உபகரணங்கள் மற்றும் ஏற்பாடுகள் இல்லாததாக சில ராணுவ வீரர்கள், தலைமை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே உக்ரைன் முகாமில் தங்கியிருந்த 8 ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களது உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பதற்காக, கடந்த டிசம்பர் 24ம் திகதி முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.பின்னர் அவர்கள் ரஷ்யாவின் பிராந்திய நகரமான பொடோல்ஸ்கி நகருக்கு சென்று, ராணுவ சேவையின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த 8 ராணுவ வீரர்களையும் கைது செய்த பொலிஸார், ராணுவ பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்ட குற்றத்திற்காக சிறையில் அடைத்தனர்.தற்போது ராணுவ நீதிமன்றத்தில் அந்த 8 ராணுவ வீரர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த ஆண்டு உக்ரைன் போர் துவங்கிய சமயத்தில், ராணுவ வீரர்களின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக, ரஷ்ய அரசு சிறை தண்டனையை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்