ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை முழுவதுமாக நிறுத்திய ரஷ்யா!

உக்ரைன் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஐந்தாண்டு எரிவாயு போக்குவரத்து ஒப்பந்தம் ஜனவரி 1 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போருக்கு மத்தியில் ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று Kyiv பலமுறை கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது,

உக்ரைனின் எரிசக்தி மந்திரி ஜெர்மன் கலுஷ்செங்கோ ஒரு அறிக்கையில், “ரஷ்ய எரிவாயு போக்குவரத்தை நாங்கள் நிறுத்தினோம்” என்று கூறினார்.

“இது ஒரு வரலாற்று நிகழ்வு. ரஷ்யா அதன் சந்தைகளை இழக்கிறது, அது நிதி இழப்புகளை சந்திக்கும். ஐரோப்பா ஏற்கனவே ரஷ்ய எரிவாயுவை கைவிடும் முடிவை எடுத்துள்ளது.” எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom, நிறுத்தத்தால் எரிவாயு விற்பனையில் $5bn (£3.9bn) அளவிற்கு இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்