ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரின் மைத்துனர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் மைத்துனர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே 25 வயதான இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 2045 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




