இலங்கை

வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு அமுலாகும் கட்டுப்பாடு!

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண்கள் நாட்டிற்குள் விட்டு வெளிநாடு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

முன்னதாக வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏழாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்