இலங்கை செய்தி

வெளிநாட்டில் இருக்கும் நான்கு இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை

வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான்  இன்று (26) சிவப்பு பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாகவும் கூறப்படும் தந்தை மகன் தம்பதியினருக்கும் மேலும் இருவருக்குமே சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு 2021ஆம் ஆண்டு பத்து சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், அவர்களில் நான்கு சந்தேக நபர்களுக்கு சிவப்பு பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் மேலதிக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை