ஐரோப்பா

மோதலை முடிவுக்குக் கொண்டு வர தயார் – புட்டின் எடுத்த தீர்மானம்

உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.

அதற்கான பேச்சுவார்ததை நடத்தவும் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோச்சி நகரில் வால்டாய் கிளப் நடத்திய உரையாடலில் புட்டின் கலந்து கொண்டு பேசுகையில், இதனை கூறியுள்ளார்.

உக்ரைன் நடுநிலை வகிக்காவிட்டால், அதனை பிற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்துவர் எனவும் உக்ரைனை ஒட்டிய ரஷ்யாவின் எல்லையை அப்பகுதி மக்கள்தான் முடிவு செய்வார்கள் எனவும் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் சுமூகமான நம்பகத்தன்மையான நிலைக்குத் திரும்ப வேண்டும் என புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய ஆசியாவில் சீனாவின் நிலையான கொள்கை ரஷ்யாவுக்கு உதவிகரமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்