பொழுதுபோக்கு

வேட்டையன் மீண்டும் புறப்பட்டுச் சென்றான்.. எங்கு தெரியுமா?

வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் மும்பை கிளம்பிச் சென்றுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், பல நட்சத்திரங்களின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுதபூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு வேட்டையன் வெளியாகும் என்னை எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை கிளம்பி சென்றுள்ள காட்சிகள் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

ஏற்கனவே வேட்டையன் படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. அமிதாப் பச்சன் அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார். மீண்டும் தற்போது மும்பையில் சில காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பிச் சென்றார்.

வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் கூலி படத்தின் சூட்டிங் நடிகர் ரஜினிகாந்த் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்