இலங்கை செய்தி

கொழும்பில் சர்மத்தை வெண்மையாக்கும் கிறீம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

அவற்றினை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனைக்குட்படுத்தபட்டது.

இதன் போது சட்ட விரோதமாக மருந்துகள் மற்றும் சர்மத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மருந்து பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன அதிகாரிகளால் எடுத்தது செல்லப்பட்டது.

அத்துடன் ,குறித்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை