சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – இருவர் பலி!
சீனாவின் தென்மேற்குப் பகுதியான குவாங்சியில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக , லியுஷோ நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் 08 கி.மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் கூறியுள்ளது.




