ஆசியா

தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக வடகொரியா மீண்டும் மிரட்டல்

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கிம் ஜாங் உன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் “கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தினால் எந்தவித தயக்கங்களும் இன்றி எங்கள் எதிரிகளின் மீது எல்லா விதமான தாக்குதல்களையும் பயன்படுத்துவோம். அதில் அணு ஆயுதங்களுக்கும் விதிவிலக்கு இல்லை. தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு அணுசக்தி அடிப்படையில் தங்கள் ராணுவக் கூட்டணியை வலுப்படுத்த முயல்வதால் வட கொரியாவின் அணுசக்தி முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும். இது கொரிய தீபகற்பத்தின் மீதான அதிகார சமநிலையை உடைக்கும் ஆபத்தை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே பலமுறை அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக கிம் மிரட்டல்கள் விடுத்திருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய மிரட்டல் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் பொருட்டு அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் – தென் கொரியாவின் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜூலையில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தென் கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை. வட கொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சித்தால், அதுவே கிம் ஆட்சியின் முடிவாக இருக்கும் என அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்