இலங்கை செய்தி

அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இன்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

“சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள், டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்போகிறோமா அல்லது அவசர கொள்முதல்களுக்கு செல்கிறோமா என்று.

எங்களுக்கு அவசர மின்சார கொள்முதல்களுக்கு செல்ல எந்த அவசியமும் இல்லை.

இப்போது இந்த நாட்களிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றாக்குறையாக இருந்தாலும், நாங்கள் முதலில் CEBயின் டீசல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து எடுப்போம்.

CEBயிடம் டீசலால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, அவற்றிலும் குறைந்த செலவில் இயங்கும் ஒன்றில் இருந்துதான் நாங்கள் எடுக்கிறோம்,” என்று அவர் கூறினார்

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை