இலங்கை செய்தி

தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக புதிய களனி பாலம் போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

புதிய களனி பாலம் நாளை (டிசம்பர் 01) முதல் மூன்று கட்டங்களாக போக்குவரத்துக்கு மூடப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

கட்டம் 01 – டிசம்பர் முதலாம் திகதி காலை 9.00 மணி முதல் டிசம்பர் 04ஆம் திகதி காலை 6.00 மணி வரை

கட்டம் 02 – டிசம்பர் 08ஆம் திகதி காலை 9.00 மணி முதல் டிசம்பர் 11ஆம் திகதி காலை 6.00 மணி வரை

கட்டம் 03 – டிசம்பர் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் டிசம்பர் 18ஆம் திகதி காலை 6:00 மணி வரை.

இந்நிலையில். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை