இலங்கை

கொழும்பிற்கும் – அபுதாபிக்கும் இடையில் புதிய விமான சேவைகள்!

இலங்கையையும் – அபுதாபியையும் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகளை ஏர் அரேபியா அபுதாபி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமான சேவை திட்டம் 2024 ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பண்டார்நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி விமான நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறித்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஏர் அரேபியாவின் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடெல் அல் அலி,  அபுதாபியிலிருந்து நேரடி விமானங்கள் மூலம் கொழும்பை எங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஏர் அரேபியா அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயண மற்றும் சுற்றுலாத் தொழில்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், பல இடங்களுடனான தலைநகரின் இணைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்