ஐரோப்பா

புதிய உலகில் புதிய ஐரோப்பா : அல்பேனியாவில் ஒன்றுக்கூடும் 47 நாடுகளின் தலைவர்கள்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள 47 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள்,  அல்பேனியாவின் தலைநகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிரானாவில் நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூகம் அல்லது EPC உச்சிமாநாட்டின் கருப்பொருள் “புதிய உலகில் புதிய ஐரோப்பா என்பதாகும்.

கண்டத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் அங்கீகரிக்கப்படாத இடம்பெயர்வைச் சமாளிப்பதற்கான வழிகளை கண்டறிய இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டு பிராகாவில் நடந்த தொடக்க உச்சிமாநாட்டில், அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் தலைவர்கள் நீண்டகால எதிரிகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் அரிய பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை தொடர்ந்து இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்