இலங்கை

தேசிய ஒற்றுமை: திருமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையில் பொங்கல்!

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று (15) இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை நிலாவெளி வீதியிலுள்ள பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சுகிதவங்ச திஸ்ஸ தேரர் இன ஒற்றுமையை வலுவூட்டும் விதத்தில் விகாரைக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் குறித்த விகாரையை நிர்மாணிக்கும் காலகட்டத்தில் பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் குறித்த இடத்திலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டு தற்போது பிரித் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லா மதங்களும் ஒன்றுமையையே போதிக்கின்றன. அதேபோன்று நாமும் ஐக்கியத்துடன் மற்றவர்களை மதித்து வாழ வேண்டும் என்ற நோக்குடன் இன்றைய தினம் பொங்கல் நிகழ்வுகளிலும் பங்கு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்