இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு: புதிய தலைவராக மஹிந்தராஜபக்ச மீண்டும் தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்ந மாநாட்டில் பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டில், முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே, மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தார்.

அந்த யோசனையை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார்.

அதன் பிறகு, பேரவையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு பொது மாநாட்டில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இன்றைய மாநாட்டில் கட்சியின் சில முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவ்வாறான மாற்றம் எதுவும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்