ஐரோப்பா

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் – பயணங்களை நிறுத்திய ஜெர்மனி விமான சேவை

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கான விமான சேவையை சனிக்கிழமை வரை நிறுத்துவதாக ஜெர்மனிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சா, அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலால் இந்த முடிவை எடுத்ததாக லுப்தான்சா தெரிவித்துள்ளது.

ஜெர்மனின் பிராங்க்போர்ட் நகரில் இருந்து தெஹ்ரானுக்கு வாரத்திற்கு 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக வியாழக்கிழமை வரை அறிவிக்கப்பட்டிருந்த விமான சேவை நிறுத்தம், தற்போது சனிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

லுப்தான்சாவின் துணை விமான நிறுவனமான ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் தெஹ்ரானுக்கு விமானங்கள் இயக்குவதை தொடர்கிறது.

வியன்னாவில் இருந்து தெஹ்ரான் குறுகிய நேரம் என்பதாலும் பகல் பொழுதில் விமானங்கள் இயங்கும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல், ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதும் அதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்ததும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்