இலங்கை

மன்னார் – தலைக்கவசத்திற்குள் வைத்து சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடத்தல் தீவு பகுதியில் தலைகவசத்தின் உட்பகுதியில் சூட்சுமமான முறையில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து மோட்டார் சைக்களில் வருகை தந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்