செய்தி விளையாட்டு

காயம் காரணமாக தாயகம் திரும்பிய மதீஷ பதிரனா

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை.

இந்நிலையில் தொடை தசையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள இலங்கை திரும்பி உள்ளார்.

இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி