இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

மதுபான நிலைய அனுமதிப்பத்திரம் – அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட கூறும் சுமந்திரன்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மதுபானநிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர்விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம் காணப்படுகின்றது ,இவற்றிற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் யார் என்பது மக்களிற்கு தெரியவேண்டும் என சுமந்திரன்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலிற்கு முன்னர் இதனை பகிரங்கப்படுத்தவேண்டும், இதன் மூலம் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளவர்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்யலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலைகள் அதிகரிப்பு என்பது சமூக பிரச்சினை ,இது இளம்தலைமுறையினருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்,மதுபானசாலைகளை விஸ்தரிப்பதில் நேரடியாக தொடர்புபட்ட அரசியல்வாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை