இலங்கை

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை: வெளியான அறிவிப்பு

புகையிரத திணைக்களம் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று (2) முதல் நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவையை ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சேவை இடம்பெறும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.

காலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் 11:38 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும்,

பின்னர் காங்கேசன்துறையில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 7:19 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

பத்து முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட இந்த நகரங்களுக்கு இடையேயான தொடருந்தில் ஒரு பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் 3,200 ரூபா என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்