உலகம் செய்தி

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதகாவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி